குறைந்த வேக இன்டர்நெட்டிலும் வேலை செய்யும் 'யுடியூப் கோ'

By S.VENGADESHWARAN - April 15, 2017




அடுத்த தலைமுறை பயனர்களுக்காக யுடியூப் கோ என்ற புதிய மொபைல் செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த இணைய வேகத்திலும் வேலை செய்யுமாறு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணிணியை விட மொபைலில் இணையம் பயன்படுத்துவது பரவலாகிவிட்டது. அடிப்படை ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி, பாடல் கேட்க, வீடியோ பார்க்க மொபைல் இணையமே போதும் என்றாகிவிட்டது. இதில், 3ஜி அல்லது 4ஜி இணைப்பு இருக்கும் மொபைல்களில் வீடியோ பார்ப்பது எளிதான காரியமாக இருக்கும். ஆனால் அதற்கு குறைந்த வேகம் இருக்கும் இணைப்பில் பலருக்கு யுடியூப் பயன்படுத்தும் ஆசையே இருக்காது.
அப்படி குறைந்த இன்டர்நெட் வேகம் கொண்டவர்களுக்காக யுடியூப் கோ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாம் பார்க்கப்போகும், அல்லத் டவுன்லோட் செய்யப்போகும் வீடியோவின் ப்ரிவ்யூவை பார்க்க முடியும். ஸ்டாண்டர்ட், பேஸிக் என இரண்டு தரங்களில் வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். பேஸிக் தர வீடியோவின் அளவு ஒரு சில எம்பிக்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டவுன்லோட் செய்த வீடியோக்களை, டேட்டா செலவழிக்காமல் நன்பர்களுடன் பகிரலாம். டவுன்லோட் செய்த வீடியோவை இன்டர்நெட் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். குறைந்த கொள்ளவு கொண்ட மொபைல்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய குறைந்த அளவு இடம் போதுமானது. அடிப்படை ஸ்மார்ட்ஃபோன்களிலும், பழைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளிலும் வேகமாக இயங்கும்.
தற்போது யுடியூப் கோ, பரிசோதனைக்காக (beta) மட்டும் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. பயனர்களின் பின்னூட்டத்தை வைத்து இதில் மேற்கொண்டு என்ன அம்சங்கள் சேர்க்கலாம், அல்லது நீக்கலாம் என்பது குறித்து அந்நிறுவனம் முடிவு செய்யும். பின்னர் அனைவருக்கும் இந்த செயலி பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.
செயலியை டவுன்லோட் செய்ய - http://bit.ly/2kX82M3

  • Share:

You Might Also Like

0 comments